‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

ஹிட் படத்தை கொடுத்துவிட்டு அடுத்த படத்தை உடனே இயக்காமல் இடைவெளி விடுவதில் இயக்குனர் வெற்றி மாறனையே மிஞ்சி விட்டார் மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத். மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'ராஜமாணிக்கம்' என்கிற மெகா ஹிட் படம் மூலம் அறிமுகமான இவர் இந்த 13 வருடங்களில் நான்கு படங்களையும் இரண்டு குறும்படங்களையும் மட்டுமே இயக்கியுள்ளார்.
கடைசியாக இயக்கிய 'உஸ்தாத் ஹோட்டல்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றாலும் கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குபின் தற்போதுதான் பஹத் பாசிலை வைத்து 'ட்ரான்ஸ்' என்கிற படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விக்ரம் படத்தை தமிழ், மலையாளம் என இருமொழி படமாக இயக்கவுள்ளாராம். இது சாத்தியமானால் விக்ரம் 18 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளத்தில் நுழையும் படமாக இந்தப்படம் இருக்கும்.