Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் தொல்லை, மிரட்டல் : வைரமுத்து மீது சின்மயி பகீர் புகார்

10 அக், 2018 - 13:42 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-Sripaada-accuses-Vairamuthu-of-sexual-harassment

பெண்கள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதை தெரிவிக்கும் விதமாக சமூகவலைதளங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, உலகம் முழுக்க பிரபலமாகி உள்ளது. ஒவ்வொரு துறையில் இருந்து பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சினிமா துறையிலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த குற்றச்சாட்டு நீண்டு கொண்டே போகிறது.

பெங்களூரைச் சேர்ந்த சந்தியா மேனன் என்ற பத்திரிகையாளர், ஒரு பெண் தன்னிடம் கூறியதாக ஒரு தகவலை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், பாடலாசிரியர் வைரமுத்து, அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார் என கூறினார். இதை பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் ரீ-டுவீட் செய்தார்.

பெயர் குறிப்பிடாத பெண்ணின் தகவலை எப்படி நீங்கள் நம்பலாம் என சின்மயிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. சின்மயி, இது உண்மை தான் நம்புங்கள் என கூறியிருந்தார். அதேப்போன்று நடிகர் ராதாராவி மீதும் பெயர் குறிப்பிடாத ஒரு பெண், தன்னிடம் அவர் அத்துமீறியதாக குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் சின்மயி, நேரடியாக தானே வைரமுத்துவால் பாதிக்கப்பட்டேன் என டுவிட்டரில் பதிவிட்டு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் தொடர்பான வீழமாட்டோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பாடுவதற்காக நானும் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் சென்றுவிட்டனர். என்னையும், எனது அம்மா மட்டும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இருக்க சொன்னார். எதற்கு என்று கேட்டபோது, வைரமுத்துவை ஹோட்டலில் போய் பாருங்கள், அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார். நான் கோபமாகி மறுத்துவிட்டேன். உடனே இந்தியா திரும்பிவிட்டோம்.


இத்துடன் இது நிற்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து, அவர் எழுதிய புத்தக வெளியீட்டிற்கு என்னை அழைத்து, தமிழ்த் தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார். நான் மறுத்துவிட்டேன். அதற்கு அவர், அரசியல்வாதியைப் பற்றி நீ தரைக்குறைவாக பேசினாய் என்று சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார். இதையடுத்து என்னை, என் வீட்டிலிருந்தவர்கள் தேற்றினர். அதன் பிறகு வைரமுத்துவின் மேலாளருக்கு அழைத்து, நான் அதே அரசியல்வாதியிடம் சென்று அப்படி பேசவில்லை என்பதை எடுத்துக் கூறுவேன். எந்த அரசியல்வாதியையும் நான் விமர்சித்தது கிடையாது என கூறுவேன்.


இப்போது புரிகிறதா, வைரமுத்து மீது ஏன் பிறர் குற்றம் சொல்ல மறுக்கிறார்கள் என்று..., அவருக்கு அந்தளவுக்கு செல்வாக்கு உள்ளது.இவ்வாறு சின்மயி பதிவிட்டிருக்கிறார்.

நீளும் புகார்கள்

சின்மயி போன்று பெயர் குறிப்பிட விரும்பாத பல பெண்கள் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

சித்தார்த் ஆதரவு

சின்மயின் இந்த குற்றச்சாட்டை திரையுலகினர் யாரும் வரவேற்காத நிலையில் நடிகர் சித்தார்த் மட்டும், சின்மயிக்கு டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.வைரமுத்து பதில்
தன் மீதான குற்றச்சாட்டுக்கு வைரமுத்து டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்" என பதிவிட்டிருக்கிறார்.வைரமுத்து விளக்கமளித்த சில நிமிடங்களிலேயே, அவர் ஒரு பொய்யர் என டுவிட்டரில் பதிவிட்டார் சின்மயி.


Advertisement
கருத்துகள் (186) கருத்தைப் பதிவு செய்ய
ஜப்தி நடவடிக்கை : சிம்புவிற்கு மீண்டும் கோர்ட் எச்சரிக்கைஜப்தி நடவடிக்கை : சிம்புவிற்கு ... திரைப்பட விழாக்களிலிருந்து தியேட்டருக்கு வருகிறது மனுசங்கடா திரைப்பட விழாக்களிலிருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (186)

P.K. GANESAN - chennai ,இந்தியா
12 அக், 2018 - 16:27 Report Abuse
P.K. GANESAN இந்த காமுகனை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும். இவன் பசுத்தோல் போர்த்திய புலி. பெண் பித்தன். பெண்ணின் உடலை வர்ணித்துப் பாடிய பொறுக்கி. தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாத அரக்கன்.
Rate this:
Roopa Malikasd - Trichy,இந்தியா
11 அக், 2018 - 13:04 Report Abuse
Roopa Malikasd அம்மா ..சேத்துல எறங்கி அதுல குளிச்சி , முழுகி எந்திரிக்கிற துறை இந்த சினிமா துறை..
Rate this:
karupanasamy - chennai,இந்தியா
11 அக், 2018 - 12:22 Report Abuse
karupanasamy இவனும் இவனுடைய ஆசானைப்போலவே பொம்பளை பொறுக்கி, இவனுடைய ஆசானைப்போலவே முற்றமிழ் விற்றவன்.மொத்தத்தில் இவனுடைய ஆசானைப்போலவே அயோக்கிய திருடன்.
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
11 அக், 2018 - 12:21 Report Abuse
pattikkaattaan "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு " இதுதானே கவிஞர்கள் வாழ்க்கை ... இதுக்கு போய் ஏன் இவ்வளவு அலப்பறை ?
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
11 அக், 2018 - 12:11 Report Abuse
V.B.RAM தன் துறையில் முன்னேற முடியவில்லை என்றல் இது போல் யார்மேலயாவது பழி போடவேண்டியது. மேலும் ரஜினி காந்த முன்னேறியவுடன் , கண்டக்டராக பணிபுரிந்தேன் எனதும், VGP வாழ்க்கையில் முன்னேறியவுடன் தெருத்தெருவாக tubelight விற்று முன்னேறினேன் என்பது ஒரு அந்தஸ்து போல் இவர்களும் முன்னேறியவுடன் சொல்வது ஒரு விளம்பர உத்தி ஆகிவிட்டது.
Rate this:
மேலும் 181 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in