இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
1989ல் வெளிவந்த 'இதயத்தை திருடாதே' படத்தில் எப்படி இருந்தாரோ, 30 வருடங்களுக்குப் பிறகும் அப்படியே இருக்கிறார் நாகார்ஜுனா. அந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்தால் கூட அவர் மட்டுமே அதில் நடிக்க முடியும் என்று தாராளமாகச் சொல்லலாம். இன்றும் தெலுங்கில் அவருக்கென தனி வரவேற்பு உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடித்த 'தோழா' படம் 2016ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. இப்போது இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். தனுஷ் இயக்கும் புதிய படத்திலும் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு, 'பிரம்மாஸ்தரா' என்ற ஹிந்திப் படத்திலும், 'மரக்கார்' என்ற மலையாளப் படத்திலும் நாகார்ஜுனா நடிக்க உள்ளார்.
தெலுங்கில் நாகார்ஜுனா நத்துள்ள 'தேவதாஸ்' படம் இந்த மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு நாகார்ஜுனா தமிழ், மலையாளம், ஹிந்திப் படங்களில் நடிக்க உள்ளார். இந்தப் படங்கள் அனைத்தும் 2019ல் வெளியாக உள்ளது.