பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க. அச்சு, பிரிஷா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் நளினி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலா ஒளிப்பதிவு செய்ய, சவுந்தர்யன் இசை அமைக்கிறார். அருணாசலம் தியேட்டர்ஸ் சார்பில் ஏ.சரவணன் தயாரிக்க, சு.சத்தியசீலன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது :
இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிற பகை. அப்படிப்பட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்த பையனும், பெண்ணும் காதலித்தால் என்ன ஆகும். முந்தைய தலைமுறை மோதிக் கொள்ள, அடுத்த தலைமுறை காதல் கொள்வது என்பது எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்பது தான் திரைக்கதை. படப்பிடிப்பு முழுவதும் ஈரோடு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் நடைபெற்றுள்ளது. இது பக்கா கமர்சியல் படமாக உருவாகி உள்ளது. என்றார் இயக்குனர் சு.சத்தியசீலன்.




