பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி | காதலருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த சமந்தா | 50 கோடி கிளப்பில் இணைந்த ‛டயஸ் இரே' : ஹாட்ரிக் அடித்த பிரணவ் மோகன்லால் | கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக தள்ளிப்போன விருஷபா | பான் இந்தியா படமாக வெளியாகும் ஹனி ரோஸின் ரேச்சல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு |

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அவரது வாழ்க்கை வரலாற்றை யாரேனும் படமாக்க விரும்பினால், அந்தப் படத்தில், கருணாநிதியாக தான் நடிக்க விரும்புகிறேன் என, பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கருணாநிதி, பல நூற்றாண்டுகளுக்கான தலைவர், இன்னும் பல ஆண்டுகளுக்கு அவரைப் போன்ற ஒரு அரசியலில் ஆளுமையுடைய; பன்முகத் தன்மை கொண்ட ஒரு தலைவர் உருவாகப் போவதில்லை. என்றைக்குமே அவருக்கு நிகர் அவராகத்தான் இருப்பார்.
அவருடைய 80 ஆண்டு கால வாழ்க்கையை நான் வாழ்ந்து பார்க்க முடியாது. ஆனால், அவருடைய கதாபாத்திரத்தை ஏற்று ஒரு படத்தில் நடித்துப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் அப்படியொரு வாய்ப்புக் கிடைக்குமா என தெரியவில்லை. அப்படியொரு வாய்ப்பை யாரேனும் படமெடுத்து, எனக்கு வழங்கினால், அது எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக நினைத்து மகிழ்வேன். இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.