தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் |

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ராதாமோகன் இயக்கி உள்ள படம் 60 வயது மாநிறம். இதில் விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி நடித்துள்ளனர். இந்த படப்பிடிப்பை ரொம்பவே சீக்ரெட்டாக நடத்தி முடித்து கடந்த வாரம்தான் இதைப்பற்றி வெளியில் அறிவித்தார்கள். படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார், விஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது ஒரு தந்தைக்கும் மகனுக்குமான கதை. இதை ராதாமோகன், ஜோதிகா நடிக்கும் காற்றின்மொழி படத்திற்கு முன்பே முடித்து விட்டார். இப்போது இதன் வெளியீடும் காற்றின் மொழி படத்திற்கு முன்னதாக வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 31ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு யு சான்றிதழ் வழங்கி தணிக்கை குழுவினர் பாராட்டியுள்ளனர். காஞ்சிவரம் போன்று இந்தப்படம் பிரகாஷ்ராஜை தேசிய விருது வரைக்கும் பேச வைக்கும் என்கிறார்கள். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு இந்தப் படம் ஆறுதலளிக்கும் என்கிறார்கள்.




