'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா உதவியாளர் ஏ.சி.முகில் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பெயரில் இருப்பதால் இது அவருடைய கதையோ என்று சந்தேகம் உள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஏ.சி.முகில் கூறியதாவது:
எனது சொந்த ஊர் சேலம். சேலம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பணியாற்றினார். அவரது அதிரடி நடவடிக்கைகள் குறித்து அப்போது பெருமையாக பேசுவார்கள். அந்த பாதிப்பு தான் இந்தக் கதை உருவாக காரணம். படத்திற்கு முதலில் பொன்மனச் செம்மல் என்று டைட்டில் வைக்கலாம் என்றிருந்தேன். படத்தின் ஹீரோ பெயர் தான் பொன் மாணிக்கவேல். அதையே படத்துக்கும் வைத்து விட்டேன்.
பிரபுதேவா எப்படி போலீசாக நடிக்கிறார் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் இந்த கதையை கேட்டவுடனேயே ஓகே சொன்ன அவர் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு உடம்பை பிட்டாக மாற்றி போலீஸ் அதிகாரியாகவே மாறினார். நிவேதா பெத்துராஜ், அவரது மனைவி அன்பரசியாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி மனைவி என்பதால் அவருக்கு பயந்து அடக்க ஒடுக்கமாக வீட்டுக்குள் வாழ்கிற பெண் அல்ல. தனது லட்சியத்துக்காக போராடுகிற பெண்ணாக நடிக்கிறார். என்றார்.