நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
சூர்யா, கார்த்தியை வைத்து படங்களை எடுத்த 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா, சமீபகாலமாக அடல்ட் கண்டன்ட் என்கிற ஆபாசப்படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார். அதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் வந்தாலும், இன்னொரு பக்கம் செமத்தியாக கல்லாகட்டி வருகிறார்.
கஜினிகாந்த் படத்தை அடுத்து இப்போது 'தேவராட்டம்' என்ற படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். 'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்' ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கி வரும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜை, கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக மதுரையில் நடைபெற்று வருகிறது. முத்தையா இதற்கு முன் இயக்கிய படங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சாதியை உயர்த்திப் பிடித்த படங்கள் தான். அந்தப்படங்களைப் போலவே இந்தப்படமும் குறிப்பிட்ட அந்த சாதியைப் பற்றிய படம் தானாம்.