ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விஸ்வரூபம் 2 படம் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், லோக் ஆயுக்தாவை நீர்த்துப் போக செய்ததன் மூலம், தமிழக அரசிற்கு வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை, மக்கள் அறிந்து கொள்வார்கள்.
பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஊழலற்ற என்ற வார்த்தையை தைரியமாக உபயோகிக்க இருக்கிறோம். இதனால் நிறையபேர் எங்களுடன் கூட்டணிக்கு வர மாட்டார்கள்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து நான் எதுவும் பேச முடியாது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. திட்டமிட்டபடி விஸ்வரூபம் 2 படம் வெளியாகும்.
பிக்பாஸ் எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகார் ஒன்றும் புதிதல்ல. இப்படியெல்லாம் நடக்க கூடும் என யூகத்தின் அடிப்படையில் சிலர் வழக்கு போட்டுள்ளார்கள்.
இவ்வாறு கமல் கூறினார்.
கருணாநிதியின் நலம் விசாரிப்பு
திமுக., தலைவர் கருணாநிதி உடல்நிலை சுகவீனம் அடைந்த போது, அவரின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். தற்போது கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனையில் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
தெலுங்கு பிக்பாஸ் வீட்டில் கமல்
விஸ்வரூபம் 2 படத்தை ஏற்கனவே சல்மானின் நிகழ்ச்சியில் புரொமோஷன் செய்த கமல், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரொமோஷன் செய்தார். அங்கு நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உள்ள பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று படத்தை புரொமோஷன் செய்தார் கமல்.