காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் |

ஹரி இயக்கத்தில் விக்ரம் த்ரிஷா நடித்த, சாமி படம் 2003ல் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றது. 'சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தை கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு இயக்கி வருகிறார் ஹரி.
விக்ரம் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். 'சாமி ஸ்கொயர்' படத்தில் வில்லனாக நடிக்கிறார் பாபி சிம்ஹா. படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்கியுள்ள விக்ரம், சாமி ஸ்கொயர் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் அடுத்த படத்துக்கு இன்னும் கூடுதலாக சம்பளம் பெற இருக்கிறார். விக்ரம் நடிக்கும் அடுத்தப்படத்தை அசுரவதம் படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ படநிறுவனம் தயாரிக்கிறது.




