இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் சித்தார்த் டுவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்குபவர். அமெரிக்கா - ஈரான் அதிபர்கள் இடையே கருத்து மோதல் நீடிக்கிறது. இதை அமெரிக்க அதிபர் டிரம்ப், டுவிட்டரில், "இனிமேல் அமெரிக்காவை எந்த நாடாவது மிரட்டினால் அந்த நாடு வரலாற்றில் இதுவரை எந்த நாடுகளும் அடைந்திராத வேதனையை விட அதிகமாக அடைய நேரிடும்" என்று ஈரானை எச்சரித்திருந்தார்.
அப்படி அவர் பதிவிட்ட அனைத்து எழுத்துக்களுமே கேபிடல் லெட்டரில் இருந்தது. இதையடுத்து சித்தார்த், உங்களுடைய கேப்ஸ் லாக் பட்டன் ஆன் ஆகியிருக்கிறது என்று கிண்டல் செய்யும் விதத்தில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.