2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மெர்க்குரி படத்தை தொடர்ந்து லக்ஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. இவற்றில் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கும் படத்தில் போலீஸாக நடிக்கிறார். பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார், இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பொன் மாணிக்கவேல் என பெயரிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பான குற்றவாளிகள் தொடர்ந்து பிடிபட்டும், ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டும் வருகின்றன. இதை சிறப்பாக செய்து வருகிறார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல்.
இவரின் பெயர் படத்தின் தலைப்பாக இருப்பதாலும், படத்தில் பிரபுதேவா போலீஸாக நடிப்பதாலும், இது சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட கதையாகவும், பிரபு தேவா பொன் மாணிக்கவேல் ரோலில் நடிக்கலாம் என தெரிகிறது.