ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது முன்னணியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கும் நாயகி சாயிஷா சைகல். தெலுங்கில் நாகார்ஜுனா, அமலா மகன் அகில் நாயகனாக அறிமுகமாகி, 2015ம் ஆண்டு வெளிவந்த 'அகில்' படத்தில் நாயகியாக அறிமுகம். அதன் பின் அஜய் தேவகன் ஜோடியாக 'ஷிவாய்' படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகியாக அறிமுகம். தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த 'வனமகன்' படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நாயகியாக அறிமுகமான முதல் படங்கள் சாயிஷாவுக்குத் தோல்வியைத்தான் தந்தன. இருந்தாலும் அவருடைய அழகும், நடனமும் ரசிகர்களைக் கவர்ந்தால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்றார்.
அவருடைய படங்கள் வரிசையாக வர உள்ள நிலையில் சாயிஷா தமிழில் நாயகியாக நடித்த இரண்டாவது படமான 'கடைக்குட்டி சிங்கம்' படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் தந்து வருகிறது. முதல் வெற்றியால் சாயிஷாவுக்கு மகிழ்ச்சிதான். அடுத்து சாயிஷா நாயகியாக நடித்துள்ள 'ஜுங்கா' படம் அடுத்த வாரம் 27ம் தேதியும், அதற்கடுத்து 'கஜினிகாந்த்' படமும் வெளிவர உள்ளன.
தற்போது சூர்யா ஜோடியாக கேவி ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சாயிஷா. வெற்றியைத் தராமல் இருந்த சாயிஷாவைத் தேடி பல வாய்ப்புகள் சென்ற நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.