இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி. இவரது மகன் யுவன், என்று தனியும் என்ற படத்தில் அறிமுகமானார். தற்போது, வாய்க்கா தகராறு என்ற படத்தில் நடித்து வருகிறார். ராயல் சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் சர்பில் பி.முருகவேல் தயாரிக்கும் படம் இது.
இதில் யுவன் ஜோடியாக வர்ஷிகா நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக விஜய்ராஜ் நடிக்கிறார். அவரது ஜோடியாக நைனா நடிக்கிறார். இவர்கள் தவிர சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே ராஜா, ரேவதி உள்பட பலர் நடிக்கிறார்கள். தேவா இசை அமைக்கிறார், முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் கே.வெங்கி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது ஒரு சென்ட்டிமென்ட் கதை. இதை கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம். சூழ்நிலை காரணமாக ஒருவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண் மகன்கள். சக்களத்தி சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய பெண்கள் ஒற்றுமையாக வாழ, ஒற்றுமையாக வாழ வேண்டிய சகோதரர்கள், மோதிக் கொள்ள, இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா, இல்லையா என்பது தான் கதை. படப்பிடிப்பு ஆந்திரா ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை திருப்போரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமப்புற வாழ்வியலை அப்படியே பதிவு செய்துள்ளோம். என்றார் இயக்குனர்.