காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி | ஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம் | தலைப்பு வைக்க கட்டுப்பாடு வருமா? | கோழைத்தனமான தாக்குதல் : சூர்யா கண்டனம் | தாய்மாமன் மகனை திருமணம் செய்தார் மதுமிதா | தாய் மதம் திரும்பினார் 'தாடி' பாலாஜி | 'கண்ணே கலைமானே' படம் : விஜய் சேதுபதி பாராட்டு | கசந்த காதல்; காதலர் தினத்தில் நடிகை தற்கொலை | திருமணத்திற்குப் பின் சாயிஷா நடிப்பாரா ? | “சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா” வரிசையில் தேவ் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'காலா' படம் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வெளிவந்தன. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதே திரையுலக வட்டாரங்களின் பேச்சாக இருந்தது. படம் சுமாராக 40 கோடி நஷ்டத்தைக் கொடுக்கும் என்றார்கள். இரண்டு வாரங்களுக்குள்ளாகவே 'காலா' படம் பற்றிய பேச்சு அடங்கிப் போனது.
இருப்பினும் படம் லாபரகமாகவும், வெற்றியும் பெற்றுது என படத்தைத் தயாரித்த உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனால், ரஜினி ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களும் உற்சாகம் அடைந்தார்கள். படம் தோல்வி என்று சொன்னவர்களும், 40 கோடி நஷ்டம் என்று பேசியவர்களும் தயாரிப்பு நிறுவனத்தின் லாப அறிவிப்புக்கு எந்தவிதமான பதில் கருத்துக்களையும் கூறவில்லை.
இது பற்றி திரையுலகத்தில் விசாரித்தால் 'காலா' படம் வாங்கியவர்களுக்கு 'வட சென்னை' படத்தைத் தருகிறோம் என்று சொல்லி அவர்கள் வாயை மூடிவிட்டார்கள் என்கிறார்கள்.