குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. தொடர்ந்து மும்பையில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.
கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்த விஸ்வாசம் படக்குழுவினர் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக ராஜமுந்திரிக்கு பயணமாகியுள்ளனர். சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் கதை கிராமத்து பின்னணியில் நடைபெறுகிறது. அதாவது, மதுரை மாவட்டம் தேனியில் நடக்கும் குடும்பக்கதை.
ஒரிஜினல் லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்களின் தொல்லை அதிக அளவில் இருக்கும், அதனால் என்னால் சுதந்திரமாக நடிக்க முடியாது என்று சொன்னாராம் அஜித். அதனால் தேனியில் எடுக்க வேண்டிய காட்சிகளை ராஜமுந்திரியில் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் இயக்குநர் சிவா.
இதற்கு அஜித் ஓகே சொல்ல, அதன் பிறகே ராஜமுந்திரிக்கு பயணப்பட்டிருக்கிறது படக்குழு. படத்தில் அஜித்திற்கு இரண்டு வேடம். 'ஏகன்', 'பில்லா', 'ஆரம்பம்' ஆகிய படங்களை தொடர்ந்து அஜித்துடன் நான்காவது முறையாக நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
அப்பா வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேர்வு செய்து வருகின்றனர். அனேகமாக சமீபத்தில் காலா படத்தில் நடித்து புகழ்பெற்ற மாஜி ஹீரோயின் ஈஸ்வரிராவ் நடிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.