Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலா நன்றாகப் போகிறது - ரஜினி மகிழ்ச்சி

15 ஜூன், 2018 - 17:28 IST
எழுத்தின் அளவு:
Kaala-going-well-says-Rajini

ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த வாரம் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கர்நாடகாவில் மட்டும் மறுநாளிலிருந்து முழுமையாக வெளியானது. படத்திற்கு இருவேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் படம் ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலி படத்தை விட வசூலில் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.

சென்னையில் மட்டும் படம் நன்றாக வசூலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும், ஹிந்தியிலும் படம் தோல்வியடைந்துவிட்டது. தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வசூலைப் பெறவில்லை என்பதே உண்மை என படத்தை வாங்கி வெளியிட்டவர்களும் தியேட்டர்காரர்களும் தெரிவிக்கிறார்கள்.

இருப்பினும், ரஜினிகாந்த், டார்ஜிலிங்கில் அளித்த பேட்டியில், கடவுளின் அருளால் தமிழ்நாடு, கர்நாடகா, வெளிநாடுகள் ஆகியவற்றில் காலா படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். புதிய படத்திற்காக டார்ஜினிலிங்கில் ஒரு மாதம் வரை தங்கியிருக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, சென்னையைத் தவிர பல வெளியூர்களில் காலா வெளியான தியேட்டர்களில் படத்தை மாற்றிவிட்டார்கள் என்றும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய
துல்கர் சல்மானின் புதிய தமிழ்ப்படம் வான்துல்கர் சல்மானின் புதிய தமிழ்ப்படம் ... திருநங்கைகள் பற்றிய கிண்டல் பதிவு - மன்னிப்பு கேட்டார் கஸ்தூரி திருநங்கைகள் பற்றிய கிண்டல் பதிவு - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (36)

indran - Chennai,இந்தியா
16 ஜூன், 2018 - 16:50 Report Abuse
indran கொள்ளையர்களை, ஆணவக்கொலை செய்பவர்களை விமர்சித்து எழுதுங்கள் அது பத்திரிக்கை தர்மம், மனிதநேயம் காக்க உதவும், அதுவரை என்னுடைய விமர்சனமும் தொடரும் நாகரீகமாக.
Rate this:
16 ஜூன், 2018 - 15:04 Report Abuse
Vaalpayyan ரஜினி இது போன்ற படங்களை ஒதுக்க வேண்டும் ..... காலா ரஜினி பட வரிசையில் பெரிய சறுக்கல் .... இன்னொறு லிங்கா ....
Rate this:
Kadambur Srinivasan - Chennai,இந்தியா
16 ஜூன், 2018 - 14:53 Report Abuse
Kadambur Srinivasan ரஞ்சித் போதைக்கு ரஜினி ஊறுகாய் காலா படம் சமீபத்தில் பார்தேன், அந்த படத்தில் என்ன கருத்து சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை. தாராவி இடம் கடைசி வரைக்கும் குப்பையாகத்தான் இருக்கு, சேறு அள்ளப்படாத காவாய், தகர ஓடு வீடு எல்லாம் அப்படியேதான் இருக்கு, அதை மாத்த என்ன செய்தார்கள், இராமனை வில்லனாக காட்ட வேண்டும் என்ற குறிகோளுடன் எடுக்க பட்டதாக தெரிகிறது. அந்த காலனி மக்களுக்கு காலா என்ன செய்தார் ? ரஜினி ஹீரோஷிம் படத்தில் இல்லை. வயதான ரஜினி, மனைவி மீது காதல் போன்றவை ரஜினியின் நடிப்புக்கு மெருகு கூயுள்ளது. மீண்டும் ரஞ்சித் படத்தில் ரஜினி நடிப்பதை தவிர்க்கவும். நன்றி
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
16 ஜூன், 2018 - 13:34 Report Abuse
N Annamalai உண்மையாகவே மக்கள் இந்த படத்தை பார்க்கவில்லை.படம் நன்றாக இல்லை என்று அர்த்தம்.அவர் கூட இருப்பவர்கள் தவறாக கூறிக்கொண்டு உள்ளனர் .
Rate this:
Bhagyaraj Rbraj - COIMBATORE,இந்தியா
16 ஜூன், 2018 - 13:06 Report Abuse
Bhagyaraj Rbraj சூப்பர் மூவி .,
Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in