ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பா.ரஞ்சித், ரஜினிகாந்த் கூட்டணி 'கபாலி' படத்திற்குப் பிறகு அடுத்து மீண்டும் இணைந்த 'காலா' படம் ஜுன் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 'கபாலி' படத்திற்கு இருந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் 'காலா' படத்திற்கு அமையவில்லை.
'கபாலி' படத்தை விமானத்தில் கூட விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், 'காலா' படத்தை தெரு சுவற்றில் கூட சரியாக விளம்பரப்படுத்தவில்லை என தியேட்டர்காரர்களிடமும், ரசிகர்களிடமும் இருக்கிறது. அது 'காலா' படத்தின் வசூலில் நன்றாகவே தெரிகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றாலே அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகள், முதல் நாள் வசூல் என அமர்க்களமாக இருக்கும் 'கபாலி' படம் அமெரிக்காவில் சிறப்பு பிரிமீயர் காட்சிகளில் மட்டுமே சுமார் 19 லட்சம் யுஎஸ் டாலர் வசூலித்தது. இந்திய ரூபாயில் சுமார் 13 கோடி.
ஆனால், 'காலா' படம் சிறப்பு பிரிமீயர் காட்சிகளில் 5 லட்சம் யுஎஸ் டாலர் மட்டுமே வசூலாகியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3.3 கோடி. 'கபாலி' வசூலில் மூன்றில் ஒரு பங்குதான் 'காலா' வசூலித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் அமெரிக்காவில் மொத்தமாக 10 லட்சம் யுஎஸ் டாலர்தான் வசூலித்துள்ளது என்பது எதிர்பார்த்ததை விட மிகக் குறைவு என்கிறார்கள்.
உலக அளவில் 'கபாலி' படத்தின் முதல் நாள் வசூல் 87 கோடியாக இருந்தது. ஆனால், 'காலா' படத்தின் வசூல் 40 கோடிக்கும் குறைவாகவேதான் வசூலித்துள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டுமே படத்திற்கு ஓரளவிற்கு வரவேற்பு இருக்கிறது. அதிலும், தென் மாவட்டங்களில் 40 சதவீதம் அளவிற்குத்தான் தியேட்டர்களில் ரசிகர்கள் வருகிறார்களாம்.
ஹிந்தியில் முதல் நாளிலேயே படத்தின் வசூல் மொத்தமாக 1 கோடியைக் கூடத் தொடவில்லையாம். தெலுங்கில் 3 - 5 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். படம் வெளியான முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் குறைந்துள்ளது. இன்றும், நாளையும் பலர் ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ளதால் ஓரளவிற்கு வசூல் இருக்கும்.
திங்கள் கிழமைக்கான முன்பதிவு மோசமாக இருப்பதால் அடுத்த வார நாட்களில் 'காலா' வசூல் தள்ளாடினால் படத்திற்கு நஷ்டம் வரும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.