‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகிறது என்றால் அதிகபட்சம் ஒரு வாரமாவது தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் ஆகி விடும். இதுவரை ரஜினி நடித்த படங்களின் நிலையும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் நேற்று திரைக்கு வந்த காலா படத்தின் நிலைமை தலைகீழாக உள்ளது.
சென்னை, கோவை, மதுரை என சில நகரங்களில் மட்டுமே ஒருநாள் டிக்கெட் முன்பதிவு புக்காகியிருந்தது. ஆனால் பல ஊர்களில் டிக்கெட் புக்கிங் ஆகவில்லை. கவுண்டர்களிலேயே டிக்கெட் எடுத்து சென்று படம் பார்த்துள்ளனர். அந்த வகையில், பல ஏரியாக்களில் உள்ள தியேட்டர்கள் காலியாக காற்று வாங்கியிருக்கிறது.
ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள இந்த நேரத்தில் காலா படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்பது தான் எதிர்பார்ப்பதாக இருந்தது. ஆனால் ஓரிரு நாட்கள் கூட தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் காலா முன்பதிவு ஆகாதது ரஜினி வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.