'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் | 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' | பக்த பிரகலாதா, கபாலி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள் | ‛ஜனநாயகன்' ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட் | மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர | ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு | சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி | திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா | பசில் ஜோசப், அல்லு அர்ஜுன் கூட்டணி உறுதி : ஆனால் அது சக்திமான் கதை அல்ல | விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த பாலிவுட் இசையமைப்பாளர் |

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் படம் 'தேவராட்டம்'. குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா அடுத்து இயக்கும் படம் இது.
அவர் இயக்கிய மருது, கொடிவீரன் படங்கள் வணிகரீதியில் வெற்றியடையவில்லை. ஆகையால் தேவராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றநிலையில் 'தேவராட்டம்' படத்தின் கதாநாயகியாக மஞ்சிமா மோகனை கமிட் பண்ணியுள்ளார்கள்.
சிம்புவுடன் 'அச்சம் என்பது மடமையடா', விக்ரம் பிரபுவுடன் 'சத்ரியன்' உதயநிதி ஸ்டாலினுடன் 'இப்படை வெல்லும்' முதலான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மஞ்சிமா மோகன்.
அவர் நடித்த மூன்று படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் தேவராட்டம் படத்தை பெரிதும் நம்புகிறார். தொடர் தோல்விகளால் இப்படத்திற்காக தனது சம்பளத்தையும் சற்று குறைத்துள்ளாராம் மஞ்சிமா.




