இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
'விவேகம்' தோல்விக்குப் பிறகு மீண்டும் சிவா - அஜித் இணைந்துள்ள படம் 'விஸ்வாசம்'. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வட சென்னை செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக பல தமிழ்ப் படங்கள் சென்னையில் படமாகாமல் ஐதராபாத்தில் படமாகி வருவதால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், இது குறித்து பெப்சியும், தயாரிப்பாளர் சங்கமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சில தொழிலாளர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அது ஒருபுறம் இருக்க, 'விஸ்வாசம்' படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார் என்ற ஒரு தகவல் அரசல் புரசலாக வெளிவந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு அஜித், அவருடைய நரைத்த தலைமுடிக்கு 'டை' அடித்து இளமையான தோற்றத்திற்கு மாறியிருந்தார். அது தான் 'விஸ்வாசம்' படத்தில் அவருடைய 'கெட்-அப்' என சிலர் தெரிவித்தார்கள்.
ஆனால், தற்போது நடந்து வரும் படப்பிடிப்பில் அஜித் முற்றிலுமாக நரைத்த தலை, நன்றாக வளர்ந்த நரைத்த தாடி என வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். அதனால், படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள்.
இரு வேடங்களா அல்லது பிளாஷ்பேக்கில் இளமையான அஜித்தாக வருகிறாரா என்ற சஸ்பென்ஸ் உடைவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகலாம்.