அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
உயர்திரு 420, துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், படங்களில் ஸ்டைலான வில்லியாக நடித்தவர் அக்ஷ்ரா கவுடா. மாயவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்த அக்ஷ்ரா, தமிழில் அதிக வாய்ப்பு இல்லாமல் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். அதுவும் எம்.ஜி.ஆரின் வில்லியாக. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, அனிமேஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நாகேஷ் கேரக்டர்கள் அனிமேஷனில் உருவாகிறது. மற்ற கேரக்டர்கள் நேரடியாக நடிக்கிறார்கள்.
இதில் அக்ஷ்ரா கவுடா, கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும் எம்.ஜி.ஆருக்கு அந்த நாட்டில் வாழும் வில்லியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் காட்சிகள் அனிமேஷன் காட்சிகளாகவும், நேரடி காட்சிகளாகவும் படத்தில் இடம் பெறுகிறது என தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.