சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்கள் சார்ந்த மொழியிலிருந்து அடுத்த மொழியிலும் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசையுடன் 'ஸ்பைடர்' படம் மூலம் நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தமிழில் அறிமுகமானார்.
ஆனால், அந்தப் படம் தெலுங்குப் படமாகவும் அமையாமல், தமிழ்ப் படமாகவும் அமையாமல் போய்விட்டது என மகேஷ் பாபுவே சமீபத்தில் வருத்தப்பட்டுத் தெரிவித்துள்ளார். படத்தை இரண்டு மொழிகளில் தயாரித்ததுதான் தவறு என்று சொல்லியிருக்கிறார்.
'ஸ்பைடர்' தோல்விக்குப் பிறகு மகேஷ் பாபு நடித்து நேற்று வெளிவந்த 'பாரத் அனி நேனு' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் நன்றாகவே பூர்த்தி செய்துவிட்டது என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான அரசியல் கதையாக இருக்கும் இந்தப் படம் 'ஸ்பைடர்' தோல்வி வலையிலிருந்து மகேஷ் பாபுவை மீட்டுக் கொண்டுவந்துவிட்டது என்கிறார்கள். கடந்த மாதம் வெளிவந்த ராம்சரண் படமான 'ரங்கஸ்தலம்' படத்தை விடவும் இந்தப் படம் அதிகமான வசூலைக் குவிக்கும் என்றும், நேற்று முதல் நாளிலேயே அதைப் புரிந்துவிட்டது என்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.