ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தமிழ் சினிமா, கடந்த 45 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. அரசின் தலையீட்டால் இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துள்ளது. படங்களின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் கூடி விவாதித்து படங்களின் ரிலீஸை அறிவிக்க உள்ளது.
இதனிடையே நடிகர் விஷால் தன் டுவிட்டரில், திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ், இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.
மெர்க்குரி படம் ஏற்கனவே தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ரிலீஸாகிவிட்டது. படம் வெளியான உடனேயே பைரஸியும் வந்துவிட்டதால் மெர்க்குரி படம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. அதை தடுக்கும்பொருட்டு மெர்க்குரி படத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் விஷால்.




