Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்: வெங்கட் பிரபுக்கு பாண்டிராஜ் வேண்டுகோள்

13 ஏப், 2018 - 14:59 IST
எழுத்தின் அளவு:
Pandiraj-slams-Venkatprabhu

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடந்தது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக சென்னையில் நடைபெறுவதாக இருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு "நான் ஒன்றும் சொல்லலப்பா" என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது போராட்டத்தையும், ஐபிஎல் கிரிக்கெட் ரத்தையும் கிண்டல் செய்திருந்தார். இதற்கு பதிலளித்து இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

உண்மையான விவசாயி யாரும் ஐ.பி.எல். பார்க்க கூடாது என்றோ, எல்லோரும் எங்களுக்கு போராடுங்கள் என்றோ சொல்ல மாட்டார்கள். நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் நாம் சாப்பிடுவதற்கு விவசாயம் செய்து கொண்டிருப்பார்கள், அதுதான் விவசாயி. அந்த வலி புரிந்தவர்கள் போராடுகிறார்கள். புரியாதவர்கள்... போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது.

தயவு செய்து அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுபவன் விவசாயி. வெங்கட் பிரபு சார், சென்னை சூப்பர் கிங்ஸ்சை ரசியுங்கள். அது உங்கள் உரிமை. தயவு செய்து விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.

வெங்கட் பிரபு கிரிக்கெட்டை மையமாக வைத்து சென்னை 28 படத்தை இரண்டு பாகமாக இயக்கினார் என்பதும், பாண்டிராஜ் விவசாயத்தை மையமாக வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் : 65வது தேசிய விருதுகள் முழு விபரம்...!ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் : ... 51 மணி நேரத்தில் உருவான வரலாற்றுப் படம் 51 மணி நேரத்தில் உருவான வரலாற்றுப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19 ஜூலை, 2018 - 19:44 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவரு பாஜக "பிரமுகராச்சே" .. ஹா..ஹா.. ஹா.. அதான் இப்படி நினைப்பு வருது.
Rate this:
bv -  ( Posted via: Dinamalar Android App )
14 ஏப், 2018 - 10:18 Report Abuse
bv right sentence at the right time , political criminals used their life tragedy for doing politics, they wont change at any time
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in