இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி |

ஒரு சின்ன பிளாஷ் பேக். ஜிகர்தண்டா படத்தைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். அந்தப் படத்தை சொன்ன பட்ஜெட்டுக்கும் மேல் செலவை இழுத்துவிட்டு தயாரிப்பாளரை கடனாளியாக்கினார். அதன் பின் அவரால் புதிய படங்களே எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க, கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் சென்று விளக்கம் அளித்தார். அடுத்து அவர் இயக்கிய இறைவி படமும் தோல்வியடைய கார்த்திக் சுப்பராஜ் பக்கம் தயாரிப்பாளர்களே போகவில்லை.
இதனால், வேறு வழியில்லாமல் அவருடைய சொந்த நிறுவனத்தில் மெர்க்குரி என்ற பேசாத படத்தை எடுத்து முடித்திருக்கிறார். தற்போது தமிழ்த் திரையுலகத்தில் நடந்து வரும் வேலை நிறுத்தத்தை மீறி, அவருடைய மெர்க்குரி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். அதற்கு மற்ற தயாரிப்பாளர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அடுத்து, ரஜினிகாந்த் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதால் அவர் இப்படி அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார் என மற்ற தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஜிகர்தண்டா தயாரிப்பாளர் கதிரேசன் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளராக இருப்பதால், அவரைப் பழி வாங்கவும், தன் மீது தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தியதால் அந்த எரிச்சலிலும் அவர் இப்படி நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
மெர்க்குரி படத்தை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
டிரைலர் தள்ளிவைப்பு
இதனிடையே இன்று அவர் ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்த மெர்க்குரி படத்தின் டிரைலரை தள்ளி வைத்திருக்கிறார். தமிழகத்தில் நிலவி வரும் பந்த்க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இதை செய்திருக்கிறார். முன்னதாக டிரைலரை தள்ளி வைக்கும்படி திரையுலகினர் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். அதை ஏற்று இதை செய்திருக்கிறார்.