விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது குணமடைந்து வருகிறார். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிள்ளார்.
அவரை நேற்று கர்நாட முதல்வர் சித்தராமையாக தனியார் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். அப்போது அவர் உடல் நிலை குறித்த நலம் விசாரித்தார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படியும் மருத்துவமனையை அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நடிகை பாரதி, நடிகர்கள் சிவராஜ்குமார், நாகேந்திரபிரசாத் ஆகியோரும் ஜெயந்தியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
"அம்மா ஜெயந்தி தற்போது பூரண குணமடைந்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம். வதந்திகளை பரப்பவும் வேண்டாம். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியிருக்கிறார் ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார்.