புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த இளையராஜா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா, இயேசு உயிர்த்தெழுதல் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார். இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்வதாகும், அவமானப்படுத்துவதாகும் உள்ளது என்று சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர், இளையராஜா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் இன்று(மார்ச் 27) இளையராஜா மீது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது...
இயேசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தார் என்பது உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் நம்பிக்கை. இன்னும் சில தினங்களில் இயேசு உயிர்தெழுந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் இளையராஜா, இயேசு உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் பேசிய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.