அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வரும் படங்களை விட தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆகும் படங்கள் கொஞ்சம் அதிகம் தான். முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தெலுங்கில் உடனே டப்பிங் செய்து வெளியிட்டு விடுகிறார்கள். அதில் சில படங்கள் நல்ல வசூலைப் பெற்று லாபத்தையும் பெறுகின்றன.
தமிழில், கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அனைவரது பாராட்டையும் பெற்ற படமாக அமைந்தது நயன்தாரா நடித்த அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், தெலுங்கில் கர்த்தவ்யம் என்ற பெயரில் டப்பிங் ஆகி நாளை வெளியாக உள்ளது.
விஜயசாந்தி நடித்து கர்த்தவ்யம் என்ற பெயரில் 1990ம் ஆண்டு வெளிவந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. விஜயசாந்தி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த அந்தப் படம் தமிழிலும் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் டப்பிங் ஆகி இங்கும் வெற்றி பெற்றது.
தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்த கர்த்தவ்யம் என்ற பழைய படத்தின் பெயரில் அறம் வெளியாவதால் அதுவே பெரிய அறிமுகம் தான். இப்படத்தை சில நாட்களுக்கு முன் மீடியாக்களுக்கும், பிரபலங்களுக்கும் திரையிட்டுள்ளார்கள். படத்தைப் பார்த்த பலரும் பாராட்டியுள்ளார்கள். தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் எழுந்துள்ளது.