விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
சென்னை வேலப்பன்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தபோது பல சினிமாத்துறையினரும் அவரை வாழ்த்தி பேசினர். அப்போது ரஜினியை வைத்து பணக்காரன், மன்னன், குசேலன் என சில படங்களை இயக்கிய பி.வாசு ரஜினியைப் பற்றி சில அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, என் தந்தை பீதாம்பரம் ஒப்பனை கலைஞராக எம்ஜிஆரிடத்தில் பணியாற்றியவர். அதேபோல் என்டிஆர் நடித்த படங்களிலும் அவர் ஒப்பனை கலைஞராக பணியாற்றியிருக்கிறார். ரஜினிக்கு முரட்டுக்காளை படத்தில் மேக்கப் போட்டிருக்கிறார்.
ஆக, அவர் மேக்கப்போட்ட எம்ஜிஆர், என்டிஆர் ஆகிய இருவருமே முதலமைச்சராகி விட்டனர். அதேப்போன்று அடுத்தபடியாக ரஜினியும் முதலமைச்சராகி விடுவார் என்று பேசினார்.