ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
லாஸ் ஏஞ்சல்ஸ் : உலகளவில் சினிமா துறையில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். 2018-ம் ஆண்டுக்கான 90-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் பல்வேறு பிரிவுகளுக்கு விருது வழங்கப்பட்டது.
அதிகபட்சமாக, "தி ஷேப் ஆப் வாட்டர்" என்ற திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அடுத்தப்படியாக "டன்கிர்க்" திரைப்படம் 8 பிரிவுகளுக்கும், "திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசொளரி" என்கிற படம் 7 பிரிவுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
இதில், "தி ஷேப் ஆப் வாட்டர்" படம் அதிகபட்சமாக 4 விருதுகளை கைப்பற்றியது. "டன் கிரிக்" படம் 3 விருதுகளை கைப்பற்றியது.
ஆஸ்கர் விருதுகள் முழுவிபரம்...
சிறந்த இயக்குநர் : குல்லர்மோ டெல் டோரோ (தி ஷேப் ஆப் வாட்டர்)
சிறந்த நடிகர் : கேரி ஓல்டுமேன் (டார்க்கெஸ்ட் ஹவர்)
சிறந்த நடிகை : பிரான்சஸ் மெக்டார்மேண்ட் (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசெளரி)
சிறந்த படம் : தி ஷேப் ஆப் வாட்டர்
சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல் (திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசெளரி)
சிகை அலங்காரம் : கஸூஹிரோ சுஜி, லூஸி சிப்பிக், டேவிட் மலினவ்ஸ்கி ஆகிய 3 பேருக்கு கிடைத்தது (படம்: டார்க்கஸ்ட் ஹவர்)
சிறந்த ஆடை அமைப்பாளர் : மார்க் பிரிட்ஜஸ் (பேன்தம் திரெட்)
சிறந்த முழு நீள ஆவண படம்: இகாரஸ்
சிறந்த ஒலி தொகுப்பு : டன்கிர்க் (அலெக்ஸ் கிப்ஸன், ரிச்சர்டு கிங்)
சிறந்த ஒலிக்கலவைக்கான விருது: டன்கிர்க் (மார்க்கிரேக், லேண்டக்கர், கேரி ரிஸோ, வெயின்கார்டன்)
சிறந்த தயாரிப்பு நிர்வாகம் : தி ஷேப் ஆப் வாட்டர்
சிறந்த வெளிநாட்டு படம் - தி பென்டாஸ்டிக் உமன் : சிறந்த இயக்குனர் செபாஸ்டியன் லீலியோ
சிறந்த துணை நடிகை : ஆலிசன் ஜேனி (ஐ டான்யா)
சிறந்த அனிமேஷன் குறும்படம் : டியர் பாஸ்கெட்பால்
சிறந்த அனிமேஷன் படம் : கோகோ
சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் - பிளேட் ரன்னர் 2049
சிறந்த படத்தொகுப்பு - டன்கிர்க் (லீ ஸ்மித்)
சிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405
சிறந்த குறும்படம் - தி சைலன்ட் சைல்ட்
சிறந்த தழுவல் திரைக்கதை - ஜேம்ஸ் ஐவரி (கால் மி பை யுவர் நேம்)
சிறந்த திரைக்கதை ஆசிரியர் - ஜோர்டன் பீலே (கெட் அவுட்)
சிறந்த ஒளிப்பதி - பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் டிக்கின்ஸ்)
சிறந்த இசை : தி ஷேப் ஆப் வாட்டர் (அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்)
சிறந்த பாடல் : ரிமம்பர் மீ (கோகோ)
ஸ்ரீதேவி, சசிகபூருக்கு அஞ்சலி
ஆஸ்கர் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, நடிகர் சசி கபூர் மற்றும் ஹாலிவுட் நடிகர் ரோஜர் மூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆஸ்கர் நிகழ்ச்சியை டி.வி., தொகுப்பாளர் ஜிம்மிகெம்மல் 2வது முறையாக தொகுத்து வழங்கினார்.