விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

தெலுங்கில் ராம்கோபால்வர்மா இயக்கிய முதல் படம் சிவா. இந்த படத்தில் நாகார்ஜூனா நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து கோவிந்தா கோவிந்தா உள்பட மூன்று படங்களில் இணைந்த அவர்கள், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். காமெடி திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்தது. தற்போது மும்பையில் நடைபெறுகிறது.
நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக மைரா ஷரீன் நடிக்கிறார். இந்த படத்தை மே 25-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்திற்கு ஆபீசர் என்று டைட்டீல் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்பு நாகார்ஜூனா-ராம்கோபால்வர்மா இணைந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.