'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த சில ஆண்டுகளாக சற்றே பின்னடைவில் இருந்த விமலுக்கு சமீபத்தில் வெளியான 'மன்னர் வகையறா' படம் ஓரளவு கைகொடுத்திருக்கிறது. மன்னர் வகையறா படத்தையடுத்து 'கன்னி ராசி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் விமல்.
'கிங் மூவி மேக்கர்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் பி.ஷமீம் இப்ராகிம் தயாரித்து வரும் இந்த படத்தை எஸ்.முத்துராமன் இயக்குகிறார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார்.
பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த பாண்டியன் தன்னுடைய பெயரை ஆர்.பாண்டியராஜன் என்று மாற்றிக்கொண்டு இயக்குநராக அறிமுகமான படம். பிரபு ரேவதி இணைந்து நடித்து 1985-ல் வெளியான 'கன்னி ராசி' படம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்று பாண்டியராஜனுக்கு மகுடம் சூட்டியது.. அந்த படத்தின் தலைப்பைத்தான் இப்போது விமல் நடிக்கும் படத்திற்கு சூட்டியுள்ளனர்.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? பழைய கன்னிராசி படத்தை இயக்கிய பாண்டியராஜனும் புதிய கன்னிராசி படத்தில் நடிப்பதுதான். 'ரோபோ' சங்கர், 'யோகி' பாபு ஆகியோருடன் காமெடியனாக நடிக்கிறார் பாண்டியராஜன்.