புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பிரேமம் சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். தெலுங்கைப்பொறுத்தவரை பிடா, எம்சிஏ படங்களில் நடித்தவர் தற்போது சர்வானந்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கு படங்களில் அவர் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே படப்பிடிப்பு தளத்துக்கு தாமதமாக வருகிறார். சக நடிகைகளிடம் ஈகோ பார்க்கிறார் என்று அவரைப்பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது சர்வானந்துடன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ரூ. 1.5 கோடி சாய் பல்லவி சம்பளம் வாங்கியிருப்பதாக ஒரு பரபரப்பு செய்தி டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. இந்தி செய்தி வெளியானதில் இருந்து இரண்டே இரண்டு படங்களில் நடித்த நடிகைக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று ஒட்டு மொத்த டோலிவுட் நடிகைகளும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.
இந்த செய்தி உண்மையா? இல்லை வதந்தியா என்பது சாய் பல்லவி அடுத்து இதுகுறித்து அளிக்கும் விளக்கத்திற்கு பிறகுதான் தெரியவரும்.