'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஹர ஹர மகாதேவகி ஹிட்டுக்குப்பிறகு ஒரு நல்ல நாள் பாத்து சொல் றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர்.சந்திரமெளலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கெளதம் கார்த்திக். இதில் விஜயசேதுபதியுடன் இணைந்து அவர் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் பிப்ரவரி 2-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் கெளதமுடன் இணைந்து பெரும்பாலான காட்சிகளில் காமெடியன் டேனி நடித்திருக்கிறார். அதோடு, பல காட்சிகளில் தான் அதிகமாக பேசாமல் டேனியை பேசுவதற்கு வழிவிட்டு நடித்துள்ளாராம் கெளதம் கார்த்திக்.
இதுபற்றி கெளதம் கார்த்திக் கூறுகையில், ரங்கூன் படத்தில் எனது நண்பனாக நடித்தார் டேனியேல். எங்களது காம்பினேசன் நன்றாக ஒர்க்அவுட்டானது. அதையடுத்து இப்போது ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திலும் எனது நண்பனாக நடித்துள்ளார் டேனி. இந்த படத்தில் சில காட்சிகளில் என்னை விட அவரை அதிகமாக டயலாக் பேசி நடித்திருக்கிறார். காரணம், அந்த காட்சிகளில் நான் பேசுவதை விட காமெடியனான அவர் பேசினால் அந்த காட்சி சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர் சொன்னதால், விட்டுக்கொடுத்து நடித்தேன்.
மேலும், இப்படி இரண்டு படங்களில் எனது பிரண்டாக நடித்துள்ள டேனியேல், இப்போது நிஜத்திலும் எனது பிரண்டாகி விட்டார். சினிமாவைத் தவிர நாங்கள் நிறைய விசயங்களை ஷேர் பண்ணிக்கொள்கிறோம் என்கிறார் கெளதம் கார்த்திக்.