பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் நடித்த வேலைக்காரன் படம் சமீபத்தில் வெளிவந்தது. மோகன்ராஜா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சினேகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தரமற்ற உணவு பொருளால் பிள்ளையை பறிகொடுத்து விட்டு அது தரமற்ற உணவு என்று நிரூபிக்க தானே அந்த உணவை உட்கொண்டு தன்னை வருத்துவதாக அவரது கேரக்டர் இருந்தது.
18 நாட்கள் சினேகாக நடித்துக் கொடுத்தார். ஆனால் படத்தில் வந்தது சில காட்சிகள் தான். இதனால் சினேகா வருத்தமும், கவலையும் அடைந்தார். இந்த நிலையில் காட்சிகள் குறைக்கப்பட்டதற்காக இயக்குனர் மோகன்ராஜா, சினேகாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
சினேகாவின் காட்சிகள் குறைக்கப்பட்ட வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. அவரது காட்சிகள் மட்டுமல்ல வேறு சிலரின் காட்சிகள் நீக்கப்பட்ட வருத்தமும் எனக்கு உண்டு. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்யவில்லை. கதைப்படி சினேகாவின் கதை 90 நாள் நடப்பதாக இருக்கும், இதற்காக நிறைய காஷ்ட்யூம் அணிந்து அவர் நடிக்க வேண்டியது இருந்தது.
முகத் தோற்றத்திலும் நிறைய மாறுதல் காட்ட வேண்டியிருந்தது. அவரது காட்சிகள் பெரும்பாலும் மாண்டேஜ் டைப்பிலானது. இதற்காகத்தான் அவர் அதிக நாள் நடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் இன்றைக்கு அவரது கேரக்டர் தான் முதலில் பேசப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர், என்றாலும் நாங்கள் தவறு செய்திருப்பதாக சினேகா, கருதினால் மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மோகன் ராஜா கூறியிருக்கிறார்.