விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி நடித்துள்ள படம் கருப்பன். ஸ்ரீ சாய் பிலிம்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கி உள்ளார். வருகிற 29ந் தேதி படம் வெளிவருகிறது. படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி பேசியதாவது:
விக்ரம் வேதா வெளிவந்தபோது எனக்குள் ஒரு பதட்டம் இருந்தது. காரணம் அந்த கேரக்டரில் மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா மாட்டார்களா என்ற தயக்கம். ஆனால் கருப்பன் படத்தை பொருத்தவரை அந்த தயக்கம் இல்லை. காரணம் இது நம் மண் சார்ந்த கதை. ஒரு பெஸ்டிவல் மூட் உள்ள கதை. இந்தப் படம் எப்படியும் வெற்றி பெறும் என்பது தெரியும். அந்த நம்பிக்கையில்தான் குறுகிய காலத்தில் இதனை வெளியிடுகிறாம். இதில் நான் மாடுபிடி வீரனாக நடித்திருக்கிறேன். கணவன், மனைவிக்கு இடையிலான அன்பை சொல்கிற படம். என்றார்.
"இன்றைக்கு மத்திய அரசு நீட் தேர்வு, நவோதயா பள்ளி என்று தமிழக அரசு மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டால் அதனை பெற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி.
"இது கொஞ்சம் அட்வான்சான கேள்வி. இருந்தாலும் பதில் சொல்கிறேன். நீட் தேர்வால் ஒரு உயிரை பறிகொடுத்திருக்கிறோம். இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் எனக்கு விருது அறிவிக்கப்பட்டால் அதை நான் பெற்றுக் கொள்ள மாட்டேன். விருதை விட என் மக்களின் உணர்வே எனக்கு முக்கியம்" என்றார்.