பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
கே.பாக்யராஜின் சித்து பிளஸ்-2 படத்தில் அறிமுகமான சாந்தினி, பல படங்களில் நடித்து விட்டார். என்றபோதும், இன்னும் அவரால் முன்னணி நடிகையாக பட்டியலில் இடம்பெற முடியவில்லை. அதோடு, ஆரம்பத்தில் கிளாமராக நடிப்பதற்கு மறுத்து வந்த அவர், தற்போது கிளாமர் கதவுகளை திறந்து விட்டுள்ளார். இந்த நிலையில், அவரது கைவசம் வண்டி, ஹாரா, வணங்காமுடி, ராஜா ரங்குஸ்கி, பலூன், மன்னர் வகையறா என பல படங்கள் உள்ளன.
இந்த படங்கள் பற்றி சாந்தினி கூறுகையில், எல்லா நடிகைகளையும் போலவே எனக்கும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் அதற்கான படங்கள்தான் அமையவில்லை. அதனால் கிடைத்த படங்களில் நடித்து வருகிறேன். அப்படி நடித்ததின் பலனாக தற்போது ஹாரா என்றொரு ஹாரர் படத்தில் லீடு ரோலில் நடிக்கிறேன்.
மேலும் விதார்த்தின் வண்டி, மெட்ரோ சிரிஷின் ராஜா ரங்குஸ்கி மற்றும் ஜோக்கர் சோமசுந்தரம் நடிக்கும் படம் என மூன்று படங்களில் சிங்கிள் ஹீரோயினாக நடிக்கிறேன். ஆக, சில படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தபோதும், இப்போது முழு கதாநாயகியாகவும் வளர்ந்து விட்டேன். அதோடு, இந்த படங்களில் பெரிய அளவில் பிரபலமில்லாத நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தபோதும், கூடிய சீக்கிரமே பிரபலமான ஹீரோக்களுடன் நடிப்பேன். அதற்கான காலநேரம் இப்போதுதான் கனிந்து வருகிறது என்கிறார் சாந்தினி.