நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார். தமிழில் உருவான முதல் கேவா கலர் வண்ணப் படம். இதனால் அன்றைய காலக்கட்டத்தில் பெரும் பொருட் செலவில் படம் தயாரானது. படம் தயாரிப்பில் இருந்தபோது பானுமதியுடன் ஒரு பாடல் காட்சியும், ஒரு சண்டைக் காட்சியும் பாக்கி இருந்த நிலையில் எம்.ஜி.ஆரின் கால்ஷீட் முடிந்து விட்டது. அவர் வேறு படத்திற்கு சென்று விட்டார்.
அந்த பாடல் காட்சியும், சண்டையும் இல்லாமல் படத்தை வெளியிடலாம். ஆனால் டி.ஆர்.சுந்தரம் எடுத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். எம்.ஜி.ஆருக்காக காத்திருக்க விரும்பாத டி.ஆர்.சுந்தரம் எம்.ஜி.ஆர் போன்ற ஒருவரை டூப்பாக போட்டு அந்த பாடலையும், சண்டை காட்சியையும் எடுத்து முடித்தார்.
சில நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர் மார்டன் தியேட்டர்சுக்கு வந்தார். பாடலையும் சண்டையையும் எடுத்து விடலாமா என்று டி.ஆர்.சுந்ரத்திடம் கேட்டிருக்கிறார். "அதெல்லாம் எடுத்து முடித்தாச்சு ராமச்சசந்திரன். அது ரெடியா இருக்கு வேணா பார்த்துட்டு போங்க" என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் டி.ஆர் சுந்தரம் அது எந்த பாடல் காட்சி, எந்த சண்டைக் காட்சி என்பதை கடைசி வரை வெளியிடவில்லை. இனி டி.வியில் அந்த படத்தை பார்க்க நேர்ந்தால் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்வுக்கு பிறகு எம்.ஜி.ஆர்., மார்டன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கவில்லை.