புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா |
பாலா இயக்கத்தில் முதன் முறையாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் நாச்சியார். மார்ச் மாதம் 1ம் தேதி ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு, 5 மாதங்களுக்குள் முடித்துவிட்டார் பாலா. பாலா இயக்கத்தில் ஒரு படம் மிகவும் குறைவான நாட்களில் நடத்தி முடிக்கப்பட்ட படமாக நாச்சியார் அமைந்துள்ளது.
இதனிடையே தற்போது நாச்சியார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் ஒரு மும்முரமாய் நடந்து வரும் நிலையில் இப்படம் குறித்து ஜிவி பிரகாஷ் கூறியதாவது...
நாச்சியார் படத்தில் இளையராஜாவின் இசையில் நானும் ஒரு பாடல் பாட இருக்கிறேன். அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். பொதுவாக பாலா படம் என்றாலே ஹீரோவின் தோற்றம் எல்லாம் மாறிவிடும். எனக்கும் அப்படி தான். பாலா படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாய் இருந்தது" என்கிறார்.
நாச்சியார் படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது.