பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
ஏ.ஆர்.ரகுமானைப் பொறுத்தவரை தான் இசையமைத்துள்ள படங்களின் ஆடியோ விழாவுக்கு வந்தால் கூட அந்த படத்தின் பாடல்களைப் பற்றி பெரிதாக பேச மாட்டார். ஆனால் தனது குருநாதர் மணிரத்னத்தின் படங்கள் எப்போதுமே தனக்கு ஸ்பெசல் என்பதால் அவர் படங்களின் ஆடியோ விழாக்களில் மேடையிலேயே அந்த படத்தின் பாடல்களை கீப்போர்டில் வாசித்தபடியே பாடியிருக்கிறார் ரகுமான்.
அதேபோன்று தற்போது விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் இசை விழாவிலும் அந்த படத்தின் பாடல்களை மேடையில் பாடுகிறாராம் ஏ.ஆர்.ரகுமான். இதற்கு முன்பு விஜய் நடிப்பில் அழகிய தமிழ் மகன் படத்திற்கு மட்டுமே இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்போது மெர்சல் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முக்கியமாக, விஜய் ரசிகர்களை மனதில் கொண்டு அதிரடியான பாடல், மெலோடி பாடல் என இரண்டு விதமாக பாடல்களை கலந்து கொடுத்திருக்கிறாராம் ரஹ்மான். அந்தவகையில், இப்படத்தில் ரஹ்மானின் இசை பெரிய ஹைலைட்டாக அமைந்திருப்பதாக சொல்கிறார்கள்.