இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? |
ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு இனி வரிவிலக்கு கிடையாது என்பதால் ஆங்கில பெயர்களை படங்களுக்கு தலைப்பு வைக்கும் போக்கு அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்கெட்ச் என்ற ஆங்கிலத்தலைப்பில் ஒரு படம் வளர்ந்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஸ்பைடர் தெலுங்குப்படம் அதே பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. விஜய் படத்திற்கும் மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில், 'சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் படத்திற்கு 'பார்ட்டி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய 'சரோஜா' படத்தை தயாரித்த 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிப்பில் இந்தப்படம் உருவாகிறது. சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், 'மிர்ச்சி' சிவா, கயல் சந்திரன், ரெஜினா கெசண்டரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெதுராஜ் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.
வழக்கமாக வெங்கட் பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைப்பார். ஆனால் 'பார்ட்டி' படத்துக்கு வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி இசை அமைக்கிறார். வெங்கட் பிரபு இயக்கிய எல்லா படங்களிலும் பிரேம்ஜி அமரன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் பிரேம்ஜி இசை அமைப்பதோடு சரி, நடிக்கவில்லை!
பார்ட்டி படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்காதது ஏன்? பிரேம்ஜியை இசையில் வளர்த்து விடுவதற்கு தான், தன் தம்பிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
இன்னொரு காரணம்... பார்ட்டி படத்தை சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர்ராஜாவுக்கு பெரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால் அவருக்கு பதில் பிரேம்ஜியை இசையமைப்பாளராக்கினாராம் வெங்கட் பிரபு.