இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
கோடை விடுமுறை முடிந்து ஜுன் மாதம் பள்ளிகள் திறப்பதால் பொதுவாகவே இந்த மாதத்தில் அதிகமான படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் தான் படங்களை வெளியிடுவார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாகவே வருடா வருடம் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டுவதால் வேறு வழியில்லாமல் ஜுன் மாதத்திலும் படங்களை வெளியிடுகிறார்கள்.
இந்த ஜுன் மாதத்தில் முதல் வெள்ளிக் கிழமையான 2ம் தேதி 8 படங்களும், ஜுன் 9ம் தேதி 2 படங்களும், ஜுன் 15ம் தேதி 1 படமும் ஜுன் 16ம் தேதி 4 படங்களும் வெளியாகியுள்ளன.
அடுத்த வாரம் ஜுன் 23ம் தேதி 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வனமகன்' ஆகிய இரண்டு படங்களும், ஜுன் 30ம் தேதி 'நெஞ்சம் மறப்பதில்லை, இவன் தந்திரன்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளன.
ஜுன் மாதத்தின் அடுத்த இரண்டு வாரங்களில் இப்போதைக்கு இரட்டைப் போட்டி உருவாகியுள்ளது. அடுத்த வாரங்களில் வரும் 4 படங்களுக்குமே ஓரளவிற்கு எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.