தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
நாளைய மனிதன், அதிசய மனிதன், கடவுள், புரட்சி காரன், காதல் அரங்கம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், மற்றும் ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன். இவர் இன்று(ஜூன் 3-ம் தேதி) தன்னை விட சுமார் 30 வயது குறைந்த நடிகை ஷெர்லி தாஸை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி காலை 10.10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லீமேஜிக் லேட்டீரின் பிரிவியூ தியேட்டரில் திருமணம் செய்து கொண்டார். அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள "ஒரு இயக்குனரின் காதல் டைரி" படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு வந்திருந்த வேலு பிரபாகரன் மற்றும் ஷெர்லி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த வேலு பிரபாகரன் - ஷெர்லிதாஸ் திருமண ஜோடியினர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அதில், தனக்கு 60 வயது என்றும் 15 வருடமாக ஷெர்லியை தெரியும் என்றும், என் திரையுலக புரட்சி பாதைக்கு தக்க துணையாக ஷெர்லி இருப்பார் என கருதி அவரை உங்கள் முன் துணையாக்கி கொண்டேன். இதன் பின் ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொள்ள இருக்கிறோம் என்றார்.
நடிகை ஷெர்லிதாஸ் கூறும்போது, இடையில் ஐந்தாறு ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்தேன். திரும்பி வந்ததும் காதல் அரங்கம் பட சமயத்தில் இருந்து இவர் மீதும், அவரது ஹானஸ்ட் மற்றும் உண்மை பேசும் தன்மையால் ஈர்க்கப்பட்டு திருமணம் செய்து கொள்கிறேன். சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்றார்.
இத்திருமணம் நியாயம் தானா..? எனும் கேள்விக்கு, அது பற்றி பிறகு பேசுவோம்... என்ற வேலு பிரபாகரன், புது வடிவில் மீண்டும் ரிலீஸ் ஆகியிருக்கும் தனது, "ஒரு இயக்குனரின் காதல் டைரி" படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிட சொல்லிவிட்டு தன் புது ஜோடியுடன் வெளியேறினார்.
வேலு பிரபாகரன், ஏற்கனவே ஜெயதேவி எனும் நடிகை மற்றும் பெண் படத்தயாரிப்பாளருடன் புரட்சி திருமணம் நடைபெற்று சில ஆண்டுகள் வாழ்ந்து விவாகரத்து பெற்றவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.