100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
பாலிவுட் நடிகை வித்யாபாலன், சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்தது போல், தமிழிலும் அதுபோன்ற வேடத்தில் நடிக்க ரொம்பவே ஆசை என்று கூறியுள்ளார் நடிகை பிந்து மாதவி. 1980களில் தென்னிந்திய சினிமாவை தன்னுடைய நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தவர் நடிகை சில்க்ஸ்மிதா. மறைந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை சமீபத்தில், தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் எடுத்தனர். இதில் சில்க்காக வித்யாபாலன் நடித்து இருந்தார். இதுவரை இல்லாத அளவுக்கு ரொம்பவும் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார் வித்யா. படமும் சூப்பர்ஹிட்டாகி வசூலிலும் சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் தமிழிலும் இம்மாதிரியான படங்கள் எடுக்கும் ஆர்வம் திரைவட்டாரத்தில் கிளம்பி இருக்கிறது. தமிழிலும் சில்க் கதை படமானால், அதில் நான் நடிக்க காத்திருக்கிறேன் என்று கூறி வருகிறார் வெப்பம், கழுகு படங்களின் நாயகி பிந்து மாதவி. பிந்து மாதவியின் இந்த ஆர்வத்திற்கு காரணம், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரபல டைரக்டர் ஒருவர் பிந்துமாதவியின் கண்களை பார்க்கும்போது சில்க்கை காண்கிறேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.