2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |
சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்ணன் காம்பினேஷனில் தேவா இசையில், மங்கை அரிராஜன் இயக்கத்தில் நீண்ட நெடுங்காலமாக தயாரிப்பில் இருந்த பொள்ளாச்சி மாப்ளே திரைப்படம் ஒரு வழியாக கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. இதே நாளில் முரளி தனக்கு பிரேக் ஏற்படுத்தும் என நம்பிக் கொண்டிருக்கும் நீ உன்னை அறிந்தால், பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் ஞாபகங்கள், உதயா நடித்துள்ள உன்னை கண் தேடுதே..., மயில்சாமி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் கிரேன் மனோகர், போண்டா மணி, சத்யன் உள்ளிட்ட 12 காமெடியன்கள் நடித்துள்ள சிரித்தால் ரசிப்பேன் ஆகிய படங்களும் ரீலிஸ் ஆனது. ஆக மொத்தம் ஐந்து படங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரீலிஸ் ஆனது. தீபாவளி, பொங்கலுக்கு கூட சமீப காலமாக ஐந்து படங்கள் வெளிவராத நிலையில் இந்த வெள்ளி, தமிழ் திரையுலகில் விசேஷ வெள்ளியாக மின்னியது...!