இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
பேய் பட டிரெண்டிலிருந்து விடுபட்டுள்ள சுந்தர் சி, இப்போது, மிகப்
பெரிய பட்ஜெட்டில், சங்கமித்ரா என்ற சரித்திர படத்தை இயக்க தயாராகி வருகிறார். பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இந்த படத்தில், ஸ்ருதி ஹாசன், இளவரசி வேடத்தில் நடிக்கிறாராம். இதற்காக, லண்டனில், கடந்த சில நாட்களாக, முறையாக வாள் பயிற்சி பெற்று வருகிறார்.
'வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக, ஸ்ருதி ஹாசன் தன்னை முழுமையாக தயார் படுத்தி வருகிறார். வாள் வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டை பயிற்சி கலைஞரிடம், லண்டனில் பயிற்சி பெற்று வருகிறார். திரையில், ஸ்ருதியின் வாள் வீச்சு பாய்ச்சலை பார்த்து, ரசிகர்கள் மிரண்டு போய்விடுவர்' என்கிறது படக்குழு. இந்த படத்தின் கதை பற்றிய விபரங்களை, மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார், சுந்தர் சி.