பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் பெயர் போனவர் நடிகர் சரத்குமார். திரையுலகிற்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் அவரது உடலழகு மெருகேறி கொண்டே போகின்றது. இன்றைய தலைமுறை கதாநாயகர்களுக்கும் அவர் போட்டியாக இருப்பதற்கு அவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
சவாலான கதைக்களங்கள் மீது பேரார்வம் கொள்வது மட்டுமில்லாமல் தன்னை அந்த படத்திற்காக முழுவதுமாக அர்ப்பணித்து கொள்வது தான் சரத்குமாரின் சிறப்பம்சம் என்று திரை உலக வர்த்தகர் பலர் கூறுகின்றனர். சரத்குமார் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு ரெண்டாவது ஆட்டம். இந்த படத்தின் வேலைகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் துவங்க இருக்கின்றது.
"என்னுடைய சிறு வயது முதல் நான் ஹோலிவுட் நடிகர் அல் பசினோவின் படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கின்றேன். அவருடைய படங்கள் அனைத்தும் என்னுடைய மனதில் ஆழமாக பதிந்து இருப்பது மட்டுமில்லாமல் ஒருவித தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தி இருக்கின்றது.
என்னுடைய கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு என்னுடைய முன்மாதிரி அல் பசினோவின் சாயல் இருப்பதை நான் கதை எழுதும் போதே உணர்ந்து கொண்டேன். மேலும் இந்த கதையை நான் என்னுடைய தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் மற்றும் நண்பர்களிடம் கூறும் போது, இந்த கதாபாத்திரத்திற்கு மிக சரியானவர் சரத் சார் தான் என்று அனைவருமே கூறினர். அவருடைய முகமும், உடலமைப்பும் இந்த கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாக பொருந்தி உள்ளது.
அதோடு சரத் சாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும். தற்போது எங்கள் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் அறிமுக இயக்குநர் பிரித்திவி ஆதித்யா.