வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
நல்ல நடிகைகளை எளிதில் மறந்து விடுவது நம் மரபு. அப்படி மறந்தவர்களில் ஒருவர்தான் ருக்மணி விஜயகுமார். பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடன பெண்மணியாகவும், ஆண் சிறுவனாகவும் நடித்தவர். அவருடன் அறிமுகமான காஜல் அகர்வால் நம்பர் ஒண் இடத்தை பிடித்துவிட்ட நிலையில் ருக்மணி விஜயகுமார் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
பொம்மலாட்டம் படத்திற்கு பிறகு ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒரு கன்னடப் படத்தில் நடித்தார். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போகவே நடன நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார். சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் அனிமேஷன் கேரக்டரில் நடித்தார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் வருகிறார் ருக்மணி. படம் முழுக்க வருகிற நல்ல கேரக்டராம். இதுவரை அவர் கேரக்டர் பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. படம் வெளிவந்ததும் தனக்கு நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ருக்மணி விஜயகுமார்.