நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த களவாணி படத்தில் வில்லனாக அறிமுகமானவர் திருமுருகன். முதல் படத்திலேயே யதார்த்தமான வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், பின்னர் பென்சில், 49 ஓ உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது கட்டப்பாவை காணோம், அடங்காதே, ஓணான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி திருமுருகன் கூறுகையில், களவாணி படம் எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கித்தந்தது. அதையடுத்து நான் வித்தியாசமான வில்லன் வேடங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அப்போது தமிழ் சினிமாவில் காமெடி படங்களாக வரத்தொடங்கின. பின்னர் ஹாரர் படங்களாக வந்தன. அதனால் என்னைப்போன்ற வில்லன் நடிகர்களுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால்தான் என்னை அதிகமான படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் பேய் பட சீசன் ஓய்ந்து மீண்டும் எல்லா அம்சங்ளும் கொண்ட படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தமிழ்சினிமா மீண்டும் சரியான ரூட்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. அதனால் இனிமேல் என்னை அதிகமான படங்களில் பார்க்கலாம்.
மேலும், கட்டப்பாவை காணோம், அடங்காதே படங்களில் அதிரடி வில்லனாகவும், ஓணான் படத்தில் நெகடீவ் ஹீரோவாகவும் நடிக்கிறேன். இந்த படங்க ளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல அங்கீகாரமும், அடையாளமும் கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அதோடு, நம் முடைய ரசிகர்களைப் பொறுத்தவரை ஆதிபராசக்தியையும் ரசிப்பார்கள், உதிரிப் பூக்களையும் ரசிப்பார்கள், சகலகலா வல்லவனையும் ரசிப்பார்கள். அவர் களைப்பொறுத்தவரை நல்ல எண்டர்டெய்ன்மென்ட் படங்களாக இருக்க வேண்டும். அந்தவகையில், தற்போது அனைத்து அம்சங்களும் கொண்ட கதைகளில் படங்கள் வரத் தொடங்கியிருக்கிறது. இது வரவேற்க வேண்டிய விசயம் என்கிறார் திருமுருகன்.